இந்தோனேசியா மேற்கு பபுவாவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மேற்கு பபுவா பகுதியில், இந்திய நேரப்படி இன்று மதியம் 1.54 மணியளவில், 39 கிலோமீட்டர் ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு பபுவா பகுதியை மையமாகக் கொண்டு இந்த அதிர்வு பதிவாகியுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.3 எனப் பதிவானது என்றும் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்க மையம் 39 கிமீ ஆழத்தில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தோனேசியாவில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் அதிக வலிமையுள்ள 6.3 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.