AI செய்ய முடியாத வேலைகளை பட்டியலிட்ட மைக்ரோசாஃப்ட்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்கொண்டு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் AI செய்ய முடியாத வேலைகளை பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் AI ஆதிக்கம் அதிகரித்து, பல முன்னணி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடக்கச் செய்துள்ளதாகவும், இளைஞர்களுக்கு பதற்றம் ஏற்படுகின்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் அறிக்கை குறிப்பிட்டபடி, AI செய்ய முடியாத பணிகளில் செவிலியர் பணி, தீயணைப்பு பணி, எலெக்ட்ரீசியன், கப்பல் பொறியாளர், கார்பெண்டர், டயர்களுக்கு பஞ்சர் போடுதல் போன்றவை அடங்கும்.
மேலும், சில வேலைகளில் மனிதர்களின் நேரடி ஈடுபாடு கட்டாயம் தேவைப்படும் என்பதால், அவற்றை முழுமையாக AI-க்கு ஒப்படைக்க முடியாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.