AI மூலம் ஆண்டுக்கு 122 மணிநேரம் சேமிக்க முடியும் – கூகுள் தகவல்
நிர்வாக வேலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டின் மூலம், ஆண்டுக்கு 122 மணிநேரம் வரை சேமிக்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.
கூகுள் தனது ஒரு முன்னோடி திட்டத்தைப் பற்றிய அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பிரிட்டனில் உள்ள ஊழியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவை சார்ந்த பயிற்சிகளை வழங்கினால், அந்த நாடு ஆண்டுக்கு 400 பில்லியன் பவுண்டுகள் வருமானத்தை சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், AI பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சில மணிநேர பயிற்சி வழங்குவதும், தொழிலாளர்களை AI பயன்பாட்டில் நுழைவதற்கு அனுமதிப்பதும் போன்ற எளிய நடவடிக்கைகள், நிறுவனங்களின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.