டிராகன் விண்கலம் Dock செய்யும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு – சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த முதல் இந்தியராக சுபன்ஷு சுக்லா சாதனை
ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியா சார்பில் விண்வெளிக்குச் சென்ற சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வரும், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணமானார்கள்.
அவர்கள் சென்ற டிராகன் விண்கலம், திட்டமிட்டபடி சர்வதேச விண்வெளி மையத்துடன் இணையும் பணியை (Docking) வெற்றிகரமாக முடித்தது. அதன் பிறகு, சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தனர்.
இதனூடாக, சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்த முதல் இந்தியராக சுபன்ஷு சுக்லா புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார்.