“நன்றி கெட்டவர்களுடன் நான் ஏன் இருக்க வேண்டும்?” – பாஜகவில் இணைந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் – AthibAn Tv

0

“நன்றி கெட்டவர்களுடன் நான் ஏன் இருக்க வேண்டும்?” – பாஜகவில் இணைந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்

திமுகவில் இருந்து விலகிய வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், “நன்றி கெட்டவர்களுடன் நான் ஏன் இருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பி, பாஜகவில் இணைந்தார்.

தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அவர், 1993-ல் மதிமுகவிலும், பின்னர் அதிமுகவிலும் இணைந்தார். பின்னர் திமுக செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார். ஆனால் 2022-ல் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் திமுகவிலிருந்து விலகினார்.

இந்நிலையில், நெல்லையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது:

  • “தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, 40 ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்றத்தில் எடுத்துச் சென்று தீர்வு கண்டவன் நான்.
  • தமிழகத்தில் 19 நதிநீர் பிரச்சினைகள் உள்ளன; அவற்றுக்கு மத்திய அரசால்தான் தீர்வு கிடைக்கும்.
  • நான் திமுகவை விட்டு விலகவில்லை; என்னை விலக்கி வைத்தனர். விளக்கம் கேட்கப்படவே இல்லை.
  • சட்டப்படி பார்த்தால், இன்னும் நான் திமுக உறுப்பினர்தான்.
  • எனது உழைப்பை திமுக வரலாறு சொல்லும். ஆனால் நன்றி கெட்டவர்களுடன் நான் இருக்க வேண்டிய அவசியமில்லை.”