போக்சோச் சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: தமிழ்நாடு காவல் துறையின் எச்சரிக்கை
போக்சோச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்களை எதிராக, போக்சோச் சட்டம் பிரிவு 22 (1) படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது: “போக்சோச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிக்கும் நபர்களுக்கு போக்சோச் சட்டம் பிரிவு 22 (1) படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கிழக்கு மண்டலம், மயிலாப்பூர் பகுதியில், ராயப்பேட்டை சரகம் W23 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு பெண், தனது மாமனார் தனது குழந்தைக்கு பாலியல் வன்முறை செய்ததாக பொய் புகார் அளித்து W23 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் தெரிந்ததாவது, புகாராளரின் கணவர் ME படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர். மேலும், மாமனார் புகாராளரின் கணவரை கேட்டு தகராறு போடும் பழக்கம் இருப்பதால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனை ஆதாரமாக கொண்டு, புகாராளர் தனது மாமனார் மீது உண்மைக்கு புறம்பான புகார் அளித்தார் என்பது விசாரணையில் வெளிப்பட்டது.
மேலே குறிப்பிட்ட விசாரணையின் அடிப்படையில், புகாராளரின் பொய் புகார் காரணமாக, நீதிமன்றத்தின் உத்தரவில் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும், குழந்தைகளை பாலியல் தொல்லை செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கவும், மற்றும் போக்சோச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்களை எதிராக, போக்சோச் சட்டம் பிரிவு 22 (1) படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.