10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

0

10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 4) தேனி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்றைய கனமழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

  • நீலகிரி, கோயம்புத்தூர் – மலைப்பகுதிகளில் கன முதல் அதி கனமழை
  • தேனி, தென்காசி – கன முதல் மிகக் கனமழை
  • திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம் – ஓரிரு இடங்களில் கனமழை

மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.