பட்டியலின சமுதாய மக்கள் குடியிருக்கும் வழியாக தேர் செல்ல உச்சநீதிமன்ற கிளையின் உத்தரவு

0

பட்டியலின சமுதாய மக்கள் குடியிருக்கும் வழியாக தேர் செல்ல உச்சநீதிமன்ற கிளையின் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பன்தட்டை பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோயிலின் தேர் திருவிழா நிகழ்வின் போது, பட்டியலினக் குடியிருப்புகள் உள்ள வழியாக தேரை இயக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேப்பன்தட்டை கிராமத்தில் உள்ள இந்த கோயிலின் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் தெரு வழியாக செல்லக்கூடாது எனக் கூறி ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேரின் நீளம், அகலம் மற்றும் பாதையின் பரப்பளவை பரிசோதித்து அதற்கான அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதிக்கு உத்தரவு வழங்கியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி. வேல்முருகன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், குறிப்பிட்ட பகுதிகளின் வழியாக தேர் செல்ல எந்தவிதமான தடையும் இல்லை என கூறப்பட்டது.

அந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதி, கோயில் தேரை பட்டியலின மக்கள் வசிக்கும் வழியாக இயக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.