ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் திரண்ட பரந்த பக்தர்கள் கூட்டம்

0

ஆடி கிருத்திகை: திருத்தணி முருகன் கோயிலில் திரண்ட பரந்த பக்தர்கள் கூட்டம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமானதாக கருதப்படும் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்ட சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. காவடி மண்டபத்தில் உற்சவர் முருகன் மலராலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பலரும் பால் காவடி, பன்னீர் காவடி, பூமாலை காவடி, மயில் காவடி உள்ளிட்ட வண்ணமயமான காவடிகளை சுமந்து வந்து தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.