பாஜக புதிய மாநில நிர்வாகம்: குஷ்பு உள்பட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்

பாஜக புதிய மாநில நிர்வாகம்: குஷ்பு உள்பட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். இதில், நடிகை குஷ்பு சுந்தர் உட்பட 14 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நயினார் நாகேந்திரன் தெரிவித்ததாவது: “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்களின் அனுமதியுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.”

மாநில துணைத் தலைவர்கள்:

எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி. சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா. வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என். சுந்தர்.

மாநில அமைப்பு பொதுச் செயலாளர்: கேசவ விநாயகன்.

மாநில பொதுச் செயலாளர்கள்: பாலகணபதி, ராம் ஸ்ரீநிவாசன், எம். முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம்.

மாநில செயலாளர்கள்: கராத்தே தியாகராஜன், அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் உட்பட 15 பேர்.

மாநில பொருளாளர்: எஸ்.ஆர். சேகர்.

மாநில பிரிவு அமைப்பாளர்: கே.டி. ராகவன்.

மாநில அலுவலகச் செயலாளர்: எம். சந்திரன்.

மாநில தலைமை செய்தித் தொடர்பாளர்: நாராயணன் திருப்பதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *