தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் ஒத்திவைப்பு
தமிழக வெற்றிக்கழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன் உறுப்பினர் சேர்க்கை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக முன்னதாகவே இணையதளம் தொடங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 20ஆம் தேதி (நேற்று) விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், புதிய உறுப்பினர் சேர்க்கை செயலியை விஜய் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கூட்டமும், செயலி வெளியீடும் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.