மருத்துவ காரணங்களால் பதவியிலிருந்து விலகுகிறார்: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா

0

மருத்துவ காரணங்களால் பதவியிலிருந்து விலகுகிறார்: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக செயல்பட்டு வந்த ஜெகதீப் தன்கர் (74), தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவக் காரணங்களை மேற்கோளாகக் கொண்டு, அவர் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார்.

ஜெகதீப் தன்கர், 2022-ம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவரான அவரது ஐந்து ஆண்டு பதவிக்காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி முடிவடைய இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கு முன்னர், ஜூலை 10-ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசுகையில், “நான் 2027 வரை தொடர்ந்து பணியாற்றுவேன்; அதன் பிறகு ஓய்வெடுப்பேன். அதுதான் சரியான நேரம்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 1951-ம் ஆண்டு மே 18-ம் தேதி பிறந்த ஜெகதீப் தன்கர், 2003-ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2019 முதல் 2022 வரை மேற்கு வங்க மாநில ஆளுநராகவும் பணியாற்றினார். அதன் பிறகு குடியரசுத் துணைத் தலைவராக தேர்வானவர்.

தனது ராஜினாமா கடிதத்தில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி எனக்கு அளித்த ஆதரவு என்னால் மதிக்க முடியாத அளவுக்கு உயர்ந்தது” என பதிவிட்டுள்ளார்.