திருநங்கை எனும் வேடத்தில் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேச நபர் கைது

0

திருநங்கை எனும் வேடத்தில் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேச நபர் கைது

மத்திய பிரதேசத்தின் போபால் பகுதியில், திருநங்கை எனக்கூறி 8 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்பவரை போலீசார் பிடித்தனர்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து கூடுதல் டிசிபி ஷாலினி தீட்சித் தெரிவித்ததாவது: வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், 10 வயதில் இந்தியாவுக்கு வந்தார். முதலில் மும்பையில் ‘நேஹா’ என்ற பெயரில் திருநங்கை அடையாளத்தில் வாழ்க்கை நடத்தத் தொடங்கினார். அவர் அங்கு ஹிஜ்ரா சமூகத்தில் தீவிரமாக இயங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், போபாலில் உள்ள புத்வாரா பகுதியுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்தார். அங்குள்ள சில நபர்களின் உதவியுடன் போலியான ஆவணங்களை உருவாக்கி, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் பெற்றுள்ளார்.

இந்த போலி அடையாளத்தைக் கொண்டு வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல், மோசடியான இந்திய பாஸ்போர்ட் மூலம் நெகா வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருநங்கை எனத் தன்னை காட்டியதே உண்மையா, மறைக்கப்பட்ட உருவமா என்பதை உறுதிப்படுத்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், அவரது ஆவண மோசடியில் ஈடுபட்ட மற்ற தொடர்புடையவர்கள் யார் என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி தன்னை நேஹா என சித்தரித்த அப்துல் கலாம் தற்போது கைது செய்யப்பட்டு, வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் 30 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நேஹாவுக்காக போலி ஆவணங்களை உருவாக்கி வழங்கியவர்கள் தொடர்பான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஷாலினி தீட்சித் கூறினார்.