பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘கோர்ட்’ தமிழ் ரீமேக்?

0

பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘கோர்ட்’ தமிழ் ரீமேக்?

தெலுங்கில் வெளியான ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’ படத்தின் தமிழ் ரீமேக் தயாரிப்புப் பணிகள் முடிவடையும் நிலையில், இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

கடந்த மார்ச் 14-ம் தேதி, நானியின் தயாரிப்பில் வெளியான ‘கோர்ட்’ தெலுங்குப் படம் விமர்சன ரீதியாகவும், வசூலிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தமிழ் உரிமையை தயாரிப்பாளர் தியாகராஜன் வாங்கி, கடந்த சில மாதங்களாக அதற்கான ப்ரீ-பிரொடக்‌ஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது, இந்த தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் முக்கிய நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், காதல் ஜோடிகளாக ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக் மற்றும் தேவயானியின் மகள் இனியா நடிக்கவிருக்கிறார்கள்.

முன்னணி பாத்திரங்களில், பிரியதர்ஷி நடித்த கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். அதேபோல், சாய் குமார் நடித்த பாத்திரத்தில் தியாகராஜனே நுழைகிறார். இந்த ரீமேக் படத்தை தியாகராஜனும், கதிரேசனும் இணைந்து தயாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூல படமான ‘கோர்ட் – ஸ்டேட் Vs எ நோபடி’ ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் வெளியானது. பிரியதர்ஷி, ஹர்ஷ் ரோஷன், சாய் குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படமானது, அதன் வித்தியாசமான கதைக்களத்தால் பெரும் கவனம் பெற்றது. விநியோகஸ்தர்களுக்கு பல மடங்கு லாபத்தையும் அளித்தது.

இந்த ரீமேக், தமிழ் ரசிகர்களிடையே எப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.