‘கஜினி’, ‘துப்பாக்கி’ போல் ஆக்ஷன் நிறைந்தது ‘மதராஸி’ – ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்
‘மதராஸி’ படத்தின் கதையின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பகிர்ந்துள்ளார்.
வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி ‘மதராஸி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாடலை வெளியிட தயாரிப்புக் குழு விரைவில் திட்டமிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் மிகுந்த பட்ஜெட்டில் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.
‘மதராஸி’ குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியதாவது: “’கஜினி’ போன்ற ஒரு திரைக்கதையும், ‘துப்பாக்கி’ போன்ற ஸ்டண்ட் காட்சிகளும் கொண்ட படம் வேண்டுமென்று நினைத்தேன். இப்போது ‘மதராஸி’வின் ஷாட்களை பார்க்கும்போது, அதே மாதிரி உருவாகியுள்ளது என்று உணர்கிறேன்” எனத் தெரிவித்தார். ஏற்கனவே அவர் இயக்கிய ‘கஜினி’ மற்றும் ‘துப்பாக்கி’ திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘மதராஸி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு மீண்டும் வெற்றியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.