ஸ்ரீயைப் பற்றிப் பேச தயக்கம் உண்டு, காரணம்… லோகேஷ் கனகராஜின் வெளிப்படையான பதில்

0

“ஸ்ரீயைப் பற்றிப் பேச தயக்கம் உண்டு, காரணம்…” – லோகேஷ் கனகராஜின் வெளிப்படையான பதில்

இணையத்தில் விவாதத்திற்குள்ளான ஸ்ரீயின் நிலையைப் பற்றிக் குறித்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் முழுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் ஸ்ரீ பகிர்ந்த வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட நெருக்கமான நண்பர்கள், ஸ்ரீயை மீட்டு, அவரை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதுதொடர்பாக, ஒரு பேட்டியில் லோகேஷ் தனது மன நிலையை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது:

“இப்போதைக்கு ஸ்ரீ நல்ல படியாக இருக்கிறார். ஒருநாள் காலையில் வீடியோ காலில், புத்தகம் வெளியிடப் போகிறேன் என்று சொன்னான். நான், ‘பிளான் பண்ணி பண்ணலாமே’ என்றேன். ஆனால் அவன், ‘இல்ல மச்சான் உடனே பண்ணணும்’ என்று சொன்னான். அதனால் ‘சரி, நீ பண்ணு’னு சொல்லிவிட்டேன். ஆனால், அதன்பிறகு இன்ஸ்டாவில் ஓர் வீடியோ வெளியானதற்காக, ‘ஸ்ரீயை யாரும் கவனிக்கவில்லை’ என்று எனையும் சேர்த்து விமர்சித்தார்கள். இதற்குத்தான் நான் சமூகவலைத்தளத்திலிருந்து கொஞ்சம் ஓரமாக இருக்கிறேன்.

தினமும் எழுந்தவுடனே எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. ஸ்ரீயைப் பற்றி நான் பேச தயங்குவதற்குக் காரணம், அது ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை. அவனுக்கு குடும்பம் இருக்கிறது. நம் நட்பு எப்படியிருந்தாலும், அவனும் நானும் கேமரா முன் வந்து விவாதிக்கக் கூடாது. அவனும், அவன் குடும்பமும் எப்படிக் கடினமாக சந்திக்கிறார்கள் என்பதை வெளியில் சொல்ல இயலாது. ஒருநாள் அவன் முழுமையாக நிலை திருந்தி வரும்போது, எல்லாரும் அவனைப் பற்றிப் பேசிய விஷயங்கள் அவனுக்கு தெரிந்துவிடும்.

ஸ்ரீயின் சிக்கலை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உலகம் முழுக்க அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. என்னையும், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவையும் விமர்சித்தார்கள். அந்த நேரத்தில் நான் ஒரு படத்தின் ஷூட்டிங் செய்ய வேண்டியிருந்தது. அதே சமயம் ஸ்ரீயையும் கவனிக்க வேண்டியிருந்தது. இதனால்தான் சமூக வலைதளங்களில் இருந்து ஓரமாகியிருந்தேன்.

இப்போதிருக்கும் நிலைப்படி ஸ்ரீ நன்றாக இருக்கிறார். எங்களால் முடிந்த வரைக்கும் ஒருவர் மற்றவருக்குச் செய்துகொண்டு இருக்கிறோம். நாளை என்ன நடக்கும் என்பதை யாராலும் முன்கூட்டிப் பேச முடியாது,” என்று கூறினார் லோகேஷ் கனகராஜ்.