பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ திரைப்படத்தில் கெஸ்ட் தோற்றத்தில் சிவகார்த்திகேயன்!
‘டியூட்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
புதுமுக இயக்குநர் கீர்த்திஸ்வரனின் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமே ‘டியூட்’. தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 25) பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளது படக்குழுவினர்.
பெரும் பொருள் செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில், பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார். இருவரும் மோட்டார் சைக்கிளில் தோன்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. இதன்மூலம், சிவகார்த்திகேயனின் இதில் நடிப்பு உறுதியாகியுள்ளது.
முழுக்க நகைச்சுவை மற்றும் காதல் கலவையுடன் உருவாகி வரும் இந்தப் படத்தில், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவை நிகேத் பொம்மி மேற்கொள்கிறார்; இசை அமைப்பை சாய் அபயங்கர் செய்துவருகிறார். பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளையொட்டி வெளியான புதிய போஸ்டர்களில், இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளிவரும் என்பதை படக்குழு உறுதியாக அறிவித்துள்ளது.