விரைவில் சூப்பர் சிங்கர் சீனியர் 11..!

0

விரைவில் சூப்பர் சிங்கர் சீனியர் 11..!

விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிற பிரபலமான இசை நிகழ்ச்சியான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி, புதிய பருவத்துக்குத் தயார் ஆகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர் தற்போது திரைப்படத்துறையில் பிரபல பின்னணி பாடகர்களாகவும், சிலர் சுயாதீன இசை கலைஞர்களாகவும் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகின்றனர்.

நிகழ்ச்சியின் அனைத்துப் பருவங்களிலும் தமிழ் சினிமாவின் முன்னணி பின்னணிப் பாடகர்கள் நடுவர்களாக பங்கேற்றுள்ள நிலையில், ‘சூப்பர் சிங்கர் சீனியர் 11’ பருவம் விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த முறை, போட்டியாளர்கள் டெல்டா தமிழ், கொங்கு தமிழ், மற்றும் சென்னை தமிழ் என மண்டல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மக்களின் மொழிப் பன்மையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த பருவத்தில் இதுவரை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காத ஒரு புதிய பிரபலமான இசை நிபுணர் நடுவராக களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது நிகழ்ச்சிக்கு ஒரு புதிய பாணி மற்றும் திருப்பத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியின் ஒளிபரப்புத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.