சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் ராணா இணைந்தார்!

0

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் ராணா இணைந்தார்!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வரும் படம் ‘பராசக்தி’. இது அவரது 25-வது திரைப்படமாகும். இதில் முக்கிய வில்லன் வேடத்தில் ரவி மோகன் நடித்துவருகிறார். ஸ்ரீலீலா மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களை ஏற்கின்றனர்.

டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை ரவி கே. சந்திரன் மேற்கொள்கிறார். இந்த திரைப்படம் ஒரு பீரியட் கதையம்சம் கொண்டது. கல்லூரி சூழலில், இந்தி எதிர்ப்பு விவகாரத்தை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் லொகேஷனில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் ராணா ரசிகர்களுக்கு கையொப்பம் வழங்கும் காட்சிகள் காணப்படுகின்றன. இதனூடாக அவர் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதற்கான உறுதிப்பாடு கிடைத்துள்ளது. இருப்பினும் படக்குழுவினர் இதுபற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் பகிரவில்லை.