ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் ‘சோழநாட்டான்’ – தஞ்சை மண்ணின் துயரும் திமிரும்
உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜா, நரேன், சீதா, பரணி, விக்னேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சோழநாட்டான்’. படத்தை இயக்குவது பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா, ஒளிப்பதிவு எஸ்.ஆர். சதீஷ்குமார், இசை அமைப்பு எஃப்.எஸ். ஃபைசல்.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் மாரியப்பன் முத்தையா, “செவன் ஹில்ஸ் மூவி மேக்கர்” நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். படத்தின் பூஜை விழா சென்னை நகரில் நடந்தது.
திரைப்படத்தின் கரு – மண்ணும் மக்களும்
படம் குறித்தும், அதன் கதை சாராம்சத்தையும் பகிர்ந்த இயக்குநர் ரஞ்சித் கண்ணா கூறியது:
“தஞ்சாவூரில் தொடங்கி சென்னையில் முடியும் ஒரு பயணக் கதை இது.
ரேக்ளா பந்தயங்கள் மட்டுமல்ல, அந்த பிணைபட்ட மலைவாழ் மக்களின் உணர்வுகளும், துயரங்களும் இந்த கதையில் முக்கிய இடம் பிடிக்கின்றன.
ஒரு பிரபல நடிகர் வில்லனாக நடிக்கிறார். அவரைப் பற்றிய தகவல் விரைவில் தெரிவிக்கப்படும்.”
இப்படம், சோழர்களின் மண்ணான தஞ்சாவூரின் வாழ்க்கை, கலாசாரம், உணர்வு, ஆகியவற்றை திரையழகாக சொல்லும் முயற்சி என்றும் இயக்குநர் கூறினார்.