பாலிவுட்டை அதிரவைத்த ‘சயாரா’ வசூல் சாதனை!

0

பாலிவுட்டை அதிரவைத்த ‘சயாரா’ வசூல் சாதனை!

புதிய முகங்களை அறிமுகமாக கொண்டு வெளிவந்த ‘சயாரா’ திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே பாலிவுட் திரையுலகில் வசூல் மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம், இயக்குநர் மோகித் சூரி இயக்கத்தில், அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் கதாநாயகன், நாயகியாக நடித்து உள்ளனர். இருவருமே இப்படம் வாயிலாக திரைத்துறையில் முதல் முறையாக அறிமுகமாகின்றனர்.

பிரபல யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், வெளியந்த முதல் நாளிலேயே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • முதல் நாளில் மட்டும் ₹20.75 கோடி,
  • இரண்டாவது நாளில் ₹23.50 கோடி என,

    மொத்தம் இரண்டு நாட்களில் ₹44.25 கோடி வசூலித்து, முன்னணி நடிகர்களின் பல படங்களைவிட அதிகமாக வசூல் செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், BOOK MY SHOW டிக்கெட் விற்பனை தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7.25 லட்சம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, ஒரு மணி நேரத்திற்கு 40,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் தொடர்ச்சியாக புக்கிங் செய்யப்பட்டுவரும் நிலை, இந்த படத்தின் வரவேற்பு எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இந்நிலையில், திரையரங்குகளில் தொடர்ந்து மக்கள் திரண்டு வருகின்ற காரணத்தால், ‘சயாரா’ படம் ₹200 கோடி கிளப்பை எளிதாகத் தாண்டும் என்று வியாபார வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சிறப்பான வசூல் பதிவாகி வருவதால், இந்த ஆண்டு ‘சாவா’ படத்துக்கு பிறகு ₹200 கோடி வசூலிக்கும் இரண்டாவது திரைப்படமாக ‘சயாரா’ அமையலாம் என பாலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.