சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் இல்லை – மத்திய அரசு உறுதி – AthibAn Tv

0

சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் இல்லை – மத்திய அரசு உறுதி

சுங்கச்சாவடிகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது எனவும், அத்தகைய யோசனை எதுவும் இல்லை எனவும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) தெளிவுபடுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் இருசக்கர வாகனங்களிடமிருந்து சுங்கம் வசூலிக்கப்படவுள்ளதாகப் பரவிய வதந்திகளுக்குப் பின்னர், விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு எந்தவித சுங்கக் கட்டணமும் இல்லை. மேலும், எதிர்காலத்தில் வசூலிக்க வேண்டும் என்ற பரிந்துரையும் எங்களிடம் வரவில்லை. நடைமுறையில் உள்ள விதிகளின்படி கார், ஜீப், வேன், சிறிய சரக்கு வாகனங்கள், வணிக வாகனங்கள், சிற்றுந்துகள், பேருந்துகள், லாரிகள் போன்ற நான்கு சக்கரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே சுங்கம் விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.