8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் 1.55% ஆக குறைந்தது
இந்தியாவில் ஜூலை மாதம் சில்லறை பணவீக்கம் 1.55% ஆக குறைவடைந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு ஆகும்.
2025-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பணவீக்கம் மற்றும் உணவுப் பொருட்களில் ஏற்பட்ட சரிவுக்கு காரணமாக பருப்பு வகைகள், மளிகை பொருட்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, காய்கறிகள், தானியங்கள், கல்வி, முட்டை, சர்க்கரை மற்றும் மிட்டாய் போன்ற பொருட்களின் விலை குறைந்திருப்பதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பு: ஜூன் 2017-இல் சில்லறை பணவீக்கம் 1.46% ஆக இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில்தான் (2025) 1.55% என மிகக் குறைவான பணவீக்கம் பதிவாகியுள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பணவீக்கம் 2.1% மற்றும் மே மாதத்தில் 2.82% ஆக இருந்தது. அதே சமயம், கடந்த ஆண்டு (2024) ஜூலை மாதத்தில் பணவீக்கம் 3.6% ஆக இருந்தது.