ஐசிஐசிஐ வங்கி: நகரில் சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைப்பு

0

ஐசிஐசிஐ வங்கி: நகரில் சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்பு ரூ.50,000-ல் இருந்து ரூ.15,000 ஆக குறைப்பு

நகர்ப்பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கைத் தொடங்கும்போது, குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகை ரூ.50,000 என ஐசிஐசிஐ வங்கி அறிவித்திருந்தது. இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்ததால், வங்கி தற்போது அதனை மாற்றி அறிவித்துள்ளது.

புதிய மாற்றத்தின்படி, குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த தொகை ரூ.10,000 ஆக இருந்தது, எனவே தற்போதைய புதிய தொகை அதற்கும் ரூ.5,000 அதிகமாகும்.

புறநகர் பகுதிகளில் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு ரூ.25,000-இலிருந்து ரூ.7,500 ஆக, ஊரக பகுதிகளில் ரூ.10,000-இலிருந்து ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, வங்கிகள் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும், ஆனால் சில பொதுத்துறை வங்கிகள் இதற்காக விலக்கு அளிக்கின்றன.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இதுபற்றி கூறியதாவது, “தங்களது ஒழுங்குமுறை வழிகாட்டுதலில் இது இல்லை” என்று குறிப்பிடப்பட்டது.