தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு – வெள்ளியும் புதிய உச்சம்
கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுடன் இருந்த தங்கத்தின் விலை இன்று திடீர் உயர்வை கண்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் புதிய உச்ச நிலையை எட்டியுள்ளது.
மக்கள் தங்கத்தை நகை மற்றும் நாணயங்களாக மட்டுமல்ல, பாதுகாப்பான முதலீடாகவும் வாங்கி வருவது வழக்கம். இந்தியா உலகில் தங்கம் அதிகம் வாங்கும் நாடுகளில் ஒன்றாகும். உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச சந்தை நிலவரமே தங்கத்தின் விலையை தீர்மானிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.
இன்றைய விலை நிலவரம்:
- 22 காரட் தங்கம்: ஒரு கிராம் ரூ.9,315 (ரூ.100 உயர்வு) – பவுனுக்கு ரூ.74,520
- 24 காரட் சுத்த தங்கம்: பவுனுக்கு ரூ.81,288
- 18 காரட் தங்கம்: பவுனுக்கு ரூ.61,640
வெள்ளி விலை உயர்வு:
- ஒரு கிராம் ரூ.130 (ரூ.2 உயர்வு)
- கட்டி வெள்ளி (1 கிலோ) ரூ.1,30,000 (ரூ.2,000 உயர்வு)
குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி வெள்ளி ஒரு கிராம் ரூ.125-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.