3 நாட்களாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர் போராட்டம் – சென்னை உள்பட 7 இடங்களில் நடைபெற்றது – AthibAn Tv

0

3 நாட்களாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர் போராட்டம் – சென்னை உள்பட 7 இடங்களில் நடைபெற்றது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான நிலுவைப் பணப்பலனை வழங்க வேண்டும் எனக் கோரி, ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அவர்கள் மாநிலம் முழுவதும் போராடி வருகின்றனர்.

காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வகையில் நடந்த போராட்டங்களில் பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்றும் போராட்டம் இடையறாது நடைபெற்றது. சென்னையில் தாம்பரம், வடபழனி உள்ளிட்ட ஏழு பணி மனைகளில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார், தயானந்தம், துரை, பாலாஜி, சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்கள் தெரிவித்ததாவது:

“போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கான பணப்பலன் தீபாவளிக்கு முன்னதாக வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் எப்போது வழங்கப்படும் என்பதற்கான உறுதியான உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால், தீபாவளி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்தனர்.