கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள்

0

90-களில் புகழ் பெற்ற நடிகர், நடிகைகள் தற்போது கோவாவில் ஒன்றாகச் சேர்ந்துள்ளனர். இந்நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர், நடிகைகள் ஒவ்வொரு வருடமும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒன்றுகூடுவது வழக்கமாக உள்ளது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நிறத்தை தேர்வு செய்து அதே நிற ஆடைகளை அணிவது என்ற வழமையும் உள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வரிசையில், இந்த ஆண்டுக்கான கூட்டாக 90களின் பிரபலங்கள் கோவாவை இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த சந்திப்பில் அனைவரும் வெள்ளை நிற ஆடைகளைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்த சந்திப்பு, மகிழ்ச்சியான சிரிப்புகள், பழைய நினைவுகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களால் நிரம்பியது.

பலர் சேரும் இந்த நட்சத்திர கூட்டத்தில், முன்னணி இயக்குநர்களாக கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் பிரபுதேவா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், பிரபல நடிகர்களான ஜெகபதி பாபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

90களில் சினிமா ரசிகர்களை கவர்ந்த முன்னணி நடிகைகளான சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நடிகைகள் ஒன்றாக நடனமாடிய ரீல்ஸ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.