விஜய் இல்லாமல் எல்சியு சினிமாக்கள் சாத்தியமில்லை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து

0

விஜய் இல்லாமல் எல்சியு சினிமாக்கள் சாத்தியமில்லை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கருத்து

தளபதி விஜய் இல்லாமல் எல்சியு (லோகி சினிமாடிக் யூனிவர்ஸ்) படங்கள் உருவாக முடியாது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெளிவாக தெரிவித்துள்ளார்.

‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய திரைப்படங்களை இயக்கி, தனக்கே உரிய சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கி வருகிறார் லோகேஷ். இதன் தொடர்ச்சியாக ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ போன்ற படங்களை இயக்கவுள்ளார். ஆனால், நடிகர் விஜய் அரசியல் பக்கம் தீவிரமாக நகர்ந்துவரும் சூழ்நிலையில், அவர் மீண்டும் திரையில் நடிப்பாரா என்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விஜய் எல்சியு படங்களில் நடிப்பாரா என்பது குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ்,

“விஜய் இல்லாமல் எல்சியு படங்கள் இருக்க முடியாது. ஆனால் அவர் மீண்டும் இதில் கலந்து கொள்வாரா என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. இப்போது அவர் கனவு எந்த திசையில் செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எதுவாக இருந்தாலும், அவர் இல்லாமல் எல்சியு முழுமையடையாது,” என கூறியுள்ளார்.

இயக்குநரின் இந்தக் கருத்து, விஜய்யின் கதாபாத்திரம் எதிர்கால எல்சியு படங்களில் ஒரு வகையிலாவது இடம்பெறும் என்பதை உறுதி செய்கிறது. அவர் நேரடியாக நடிக்காவிட்டாலும், குறைந்தது குரல் வடிவிலாவது அவரது தோற்றம், இணைப்பு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.