இந்தியர்களை வங்கதேச எல்லைக்குள் தள்ளும் செயல்: ஒவைசியின் கண்டனம்

0

இந்தியர்களை வங்கதேச எல்லைக்குள் தள்ளும் செயல்: ஒவைசியின் கண்டனம்

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்ததுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்திய குடிமக்கள், துப்பாக்கியால் மிரட்டப்பட்டு வங்கதேச எல்லைக்குள் தள்ளப்படுகின்றனர் என்ற விஞ்சும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.

வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள், வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தவறான குற்றச்சாட்டுகளுடன் காவல்துறையால் சட்டவிரோதமாக கைது செய்யப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் துப்பரவு வேலை செய்வோராக இருக்கிறார்கள். இவர்கள் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் எதிர்கொள்ள இயலாதவர்களாக உள்ளனர்,” என அவர் தெரிவித்துள்ளார்.