சாய் சுதர்ஷன் தனது முதல் டெஸ்ட் அரைசதம் பதிவு; காயம் காரணமாக ரிஷப் பந்த் வெளியேற்றம்

0

சாய் சுதர்ஷன் தனது முதல் டெஸ்ட் அரைசதம் பதிவு; காயம் காரணமாக ரிஷப் பந்த் வெளியேற்றம்

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் சாய் சுதர்ஷன் தனது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் முறையாக அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

போட்டி நேற்று (புதன்கிழமை) மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் தொடக்கமாக களமிறங்கி, முதல் விக்கெட்டிற்கு 94 ரன்கள் கூட்டாண்மை அமைத்தனர்.

ராகுல் 98 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஷுப்மன் கில் 12 ரன்களில் விரைவில் வெளியேறினார்.

ரிஷப் பந்த் 48 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், வோக்ஸின் ஒரு பந்தை ஸ்வீப் அடிக்க முயன்ற போது பந்து அவர் வலது காலில் நேரடியாக பாய்ந்தது. இதனால் காலில் வீக்கம் ஏற்பட்டு, நடக்க முடியாத நிலையில், ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி அவர் வாகனத்தில் பெவிலியனுக்குத் திரும்பினார்.

மறுபுறம் நிதானமாக ஆடிய சாய் சுதர்ஷன், தனது இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில், 134 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அவர் 151 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸின் பந்தில் வெளியேறினார்.

முந்தைய முறையாக 2022-ல் வங்கதேசத்துடன் நடைபெற்ற டெஸ்டில், மூன்றாவது இடத்தில் பேட் செய்த புஜாரா, வெளிநாட்டு மண்ணில் 50க்கு மேல் ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் தற்போது, மூன்றாவது இடத்தில் விளையாடி அரை சதம் எடுத்துள்ள முதல் இந்திய வீரராக சாய் சுதர்ஷன் உருவெடுத்துள்ளார்.