குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்திய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய துணைத் தலைவர் தேர்வுக்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324ன் படி, குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நடைமுறைகள் தற்போது தொடங்கியுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு சபைகளையும் சேர்ந்த உறுப்பினர்களின் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், தேர்தல் அதிகாரி மற்றும் உதவி அதிகாரிகளை நியமிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேவையான ஆயத்தங்கள் முடிவடைந்தவுடன், விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தையதாக, ஜெகதீப் தன்கர் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார். அவருடைய ஐந்தாண்டு பதவிக் காலம் 2027 ஆகஸ்ட் 10ல் முடிவடைய இருந்தது. ஆனால், அவர் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தார். அவரது ராஜினாமா கடிதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பப்பட்டது.
அதில், “மருத்துவ ஆலோசனையின் பேரில்a ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர், மாநிலங்களவையின் தலைவர் என்பதாலும், தற்போது அந்த பொறுப்பிலிருந்தும் தன்கர் விலகியுள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் நேரத்தில் அவருடைய ராஜினாமா என்பது கவனிக்கத்தக்கது.