தமிழ் வளர்ச்சித்துறையின் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பணம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம்), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம்), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) ஆகியவற்றுடன், மொத்தமாக 73 விருதுகளுக்கான விண்ணப்பங்கள், தகுதியான தமிழறிஞர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.
விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் இருந்து பதிவிறக்கம் செய்து பெறலாம்:
- www.tamilvalarchithurai.tn.gov.in/awards
- http://awards.tn.gov.in
- www.tamilvalarchithurai.tn.gov.in
இந்த தகவலை தமிழ் வளர்ச்சித்துறை நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.